இந்தப் பதிவு படித்துவிட்டு வெறுமனே கடந்து போக அல்ல
முயற்சித்தால்..

நமது உடல் எவ்வளவு ஆச்சரியமான படைப்பு என்பதை கண்களை மூடி..

உள்ளுக்குள் பயணித்து
இயங்கும் ஒவ்வொரு உறுப்புக்களை பாகங்களையும் அதன்
இயக்கங்களைக் கண்டு வியக்க ஆரம்பிக்க பழக வேண்டும்..

அப்போது எந்த காரணமும் இல்லாமல் இப்பிறவி எவ்வளவு அற்புதம் என உணர ஆரம்பிப்போம்..

இரவு தூங்கும் முன் இதை கட்டாயம் முயற்சியுங்கள்..(இன்று முயற்சித்து பாருங்கள்)

நிஜத்தில் நாம் ஒவ்வொருவரும் சக்தி சொரூபமானவர்கள் ஆம்..
அதை உடல் உழைப்பால் முழுவது செலவிட வேண்டும்..
அந்த சக்தி மற்றவர் வாழ்வில் 

தெளிவை, அமைதியை உருவாக்கும் அளவிற்கு கருணை அன்பு கொண்டு விரிவடைய வேண்டும்..

அப்போது உண்மையில் நமக்கு தேவையானது எதுவானாலும் அதை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு இயற்கை(இறை) பேராற்றலுடையது..


பேரன்புடன்
இயற்கை (ரேகா பத்மநாபன்) 

எங்களின் கனிவான  நன்றி ரேகா பத்மநாபன்  ARROK MEDIA






Comments

Popular posts from this blog